பொருளாதார சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திர சுட்டி

பொருளாதார சுதந்திரம் என்பத, தனி நபர்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கு அவர்களின் பொருளாதாரத் தீர்மானங்களை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய அரச ஈடுபாடு அல்லது ஏனைய கட்டுப்பாட்டாளர்களின் ஈடுபாடு இல்லாத ஒரு நிலையாகும். பொருளாதார சுதந்திர சுட்டியானது, 42 அம்சங்கள் மூலம் கணக்கிடப்பட்டு, சைபர் முதல் (ஆகக் குறைந்தது) 10 வரை (ஆகக்கூடியது) பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்துகிறது.

உலகின் மிகச்சிறந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் பொருளாதார சுதந்திரம் என்பது, சிறந்த சமூக பொருளாதார பெறுபேறுகளைப் பெற்றுத்தரவும், கூடிய பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொடுக்கவும், உயர்மட்ட அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், ஏனைய சுதந்திரங்களை இலகுவாக ஏற்படுத்;தவும் வழிவகுக்கிறது. (மேலதிக விபரங்களுக்கு இத்துடனானான இணைப்பை பார்க்கவும்)

பொருளாதார சுதந்திரம் சுதந்திரம் என்பது, சிறந்த வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதை இலகுவாக அடையாளம் காண முடியும். ஒரு கொடுக்கல் வாங்கல் என்பது, அதனைச் சார்ந்ததோருக்கு எவ்வித இடையூறும் இன்றி, சுதந்திரமாக உடன்பட வேண்டிய ஒன்றாகும். அத்துடன், அது அனைத்து சார்ந்தோருக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவினருக்குக்கூட நன்மை தராத பட்சத்தில் அந்தக் கொடுக்கல் வாங்கலானது, தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுதந்திரமாக பொருளாதாரத் தீர்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கும் போது, வாடிக்கையாளர்கள் அதிக தரத்தையும், சிறந்த விலையையும் எதிர்பார்ப்பார்கள். உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், புதிய சந்தைச் செயற்பாட்பாட்;டாளர்களும் சுதந்திரமாக சந்தைக்கு வந்து செயற்பட வாய்ப்புக் கிடைப்பதோடு, தொடர்ச்சியாக அவர்களது தரத்தையும், விலையையும் சிறப்பாக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு இடம்பெறாத பட்சத்தில், வாடிக்கையாளர்கள் அவர்களோடு சுதந்திரமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள மாட்டார்கள். நாளாந்தம் இடம்பெறும் இரு பாலாருக்கும் நன்மை தரக்கூடிய பில்லியன் கணக்கான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வுலகில், சிறந்த செயற்திறனையும், பொருளாதாரத்தையும், புதிய தொழில் வாய்ப்புக்களையும், வறுமை ஒழிப்பையும் ஏற்படுத்த முடியும்.

சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், மக்கள், கொடுக்கல் வாங்கல்களினால் பெற்றுக்கொள்ளக்கூடிய இருபக்க நன்மைகளைத் தடுக்கிறது. அரச தலையீடு, சுதந்திரமற்ற சந்தைக் கட்டுப்பாடுகள் மற்றும் அரசுடனான ஒப்பந்தங்கள் இவ்வாறான சுதந்திரக் கொடுக்கல் வாங்கல்களை தடுத்து விடுக்கின்றன. கொடுக்கல் வாங்கல்கள் வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் பொருட்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்யும் போது வரி அறவிடப்படுகிறது. இதன் காரணமாக, இரு பாலாருக்கும் நன்மைகள் ஏற்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் பொருட்களுக்காக விதிக்கப்படும் வரிகளை செலுத்த வேண்டியிருப்பதோடு, பெரும் வசதி பெற்ற நிறுவனங்கள் அதற்கு ஏற்ற வகையில் சிறந்த பொருட்களை அல்லது சேவைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். உற்பத்தியாளர் சந்தையொன்றில் உற்பத்தியாளருக்குக் கிடைக்கக்கூடிய சலுகையானது, பொருட்களின் தரம் மற்றும் சேவைகளின் தன்மைகளுக்கு ஏற்ப சுழல்வதோடு, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் இது காரணமாக அமைந்து விடுகிறது. அரச துறையோ அல்லது உயர் வர்த்தக நிறுவனங்களோ இவ்வாறான ஒரு நிலையைச் சந்திப்பதில்லை. இதற்குப் பதிலாக, அவை ஏனைய குழுக்களை சந்தைகளில் இருந்து அகற்றிவிட்டு, ஆர்வம் காட்டுவோருக்கு வேறு வெகுமதிகளைப் பெற்றுக்கொடுத்து, அரசியல் நன்மைகளைக் கருத்திற் கொண்டு, கீழ்மட்ட மக்களுக்கு நஷ்டங்களைக் கூட சில வேளைகளில் ஏற்படுத்துகிறது. இது, இரு தரப்புக்களுக்கும் நன்மை தரக்கூடிய கொடுக்கல் வாங்கல்களை விட முற்றிலும் வித்தியாசமான தன்மை ஒன்று என்பதோடு, இவ்வாறான நிறுவனங்கள் குழுக்களாக ஒன்று சேர்ந்து மற்றையவர்களின் நஷ்டங்களில் இலாபம் பெற முயற்சிக்கின்றன.

அரசாங்கம் அல்லது அரசுடன் நட்புறவு காட்டும் உயர்மட்ட வர்த்தக நிறுவனங்கள், பொருளாதாரம் மெதுவாக வளர்ந்தாலும், இல்லையேல் அது வளராது விட்டாலும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. தனிநபர்களும், குழுக்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சொத்துக்களுக்களுக்கும், சலுகைகளுக்கும் பாடுபடுகின்றன. இணைப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் நன்மை பெறுவதோடு, மற்றையவர்களின் வாய்ப்புக்களை அதன் மூலம் தடுத்து விடுகின்றனர். ஒரு தனி நபரின் நன்மை கருதி ஒரு குழுவினது தேவைப்பாடாகக் கருதப்பட்டு பொருளாதார, இன ரீதியில், அரசியல் அல்லது மதம்சார் சேவைகளாக முன்வைக்கப்படுகிறது. ஒரு குழுவுடன் எதிர்ப்புக்காட்டும் மற்றுமொரு குழு நம்பிக்கையற்ற நிலைக்கும் ஒருவரோடு ஒருவர் குரோதத்தை வெளிப்படுத்தும் நிலையையும் ஏற்படுத்துகிறது. பொருளாதார சுதந்திரம் இல்லாத பட்சத்தில் ஒரு குழுவினர் அதிகபட்ச நன்மைகளை அடைந்து கொள்வதுடன், அதிகமானவர்கள் நஷ்டத்தில் கொண்டு விடப்படுகின்றனர். இது குழுக்களுக்கிடையில் நிலவும் அழுத்தத்தை மேலும் அதிரிக்கிறது.

பொருளாதார சுதந்திரம் என்பது, சமுதாயத்தின் பார்வைக் கோணங்களை மாற்றுகிறது. மக்கள் சுதந்திரமாக தனது பொருளாதாரத் தீர்வுகளை அடைந்து கொள்ளும் போது, அவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு பொருள் உற்பத்தியாளர்கள் அல்லது சேவை உருவாக்குனர்கள் சுதந்திரமாக அவற்றை உருவாக்க வேண்டும். அத்துடன், சுதந்திரமாக அதனை கொடுக்கல் வாங்கல் செய்யவும் வேண்டும். இன்னொருமொரு விதமாக கூறுவதாயின், மக்களுக்கு சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு புதிய உற்பத்திகளை அவர்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதில் செயற்திறன்மிக்க உற்பத்திகளுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. ஏனைய குழுக்கள் வாடிக்கையாளர்களாகவும் மூலப்பொருட்களைப் பெற்றுத் தருபவர்களாகவும் தொடர்ச்சியான கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் நபர்களாகவும் காலப்போக்கில் உருவாகி பொது மக்களிடையே ஒரு சகிப்புத் தன்மையையும் சமநிலையையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே, பொருளாதார சுதந்திரம் என்பது, அதன் சிறந்த பெறுபேறுகளை மக்கள் அனைவரிடையே பகிர்ந்தளிக்கும் போதுதான் அடைந்துகொள்ள முடியும். இதனால்தான் ஜனநாயகத்தையும், ஏனைய சுதந்திரங்களையும் ஏற்படுத்துவதற்கு, பொருளாதார சுதந்திரம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது என்று கூறப்படுகிறது. சமுதாயத்தின் எண்ணங்களையும், கருத்துக்களையும், செயற்பாடுகளையும் இது காலத்துடன் சேர்ந்து மாற்றிவிடுகிறது.

பொருளதார சுதந்திரத்தின் தாக்கம் ஊழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொருளாதார சுதந்திரம் அதிகரிப்பதன் மூலம் ஊழல் குறைவடைய காரணமாக அமைந்து விடுகிறது. இதன் எதிர்முனையில் குறைந்த பொருளாதார சுதந்திரம் ஊழக்கு வழிவகுக்கிறது. ஒரு விடயத்தை செய்வதற்கு ஒருவரின் அனுமதி பெறவேண்டும் என்ற நிலை ஏற்படும் போது, அவர் அதற்காக ஒரு கட்டணத்தை எதிர்பார்க்கும் நிலை ஏற்படுகிறது. மாறாக நீங்கள் சுதந்திரமாக உங்களது பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வேறு ஒருவரின் அனுமதியோ அதன் மூலம் அவருக்கு கட்டணங்களை செலுத்தக்கூடிய நிலையோ ஏற்படும் வாய்ப்பு இல்லாது போய்விடுகின்றது.