பின்னணி

பொருளாதார சுதந்திரம் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். மக்கள் தங்கள் சுய விருப்பத்திற்கு அமைய பொருளாதாரத் தீர்வுகளை மேற்கொள்ள உள்ள வாய்ப்பு - நிரந்தர சௌபாக்கியத்திற்கு இதுவே ஒரு அடிப்படைத் தேவையுமாகும்.

இலங்கை எமது அழகிய இல்லமாகிய ஒரு தீவாகும். அது, தனக்கே உரித்தான பல்வேறு பிரச்சினைகளையும் கொண்டுள்ளது. ஆயினும், இந்நாட்டு மக்கள் என்ற ரீதியில் பெருமை அடையக்கூடிய பல விடயங்களும் காணப்படுகின்றன. அவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறுகளும் திருத்தப்பட வேண்டிய பல விடயங்களும் உள்ளன.

எமது நாட்டின் எதிர்காலத்தை இளம் சந்ததியினரின் கண்கள் ஊடாகக் காண அட்வோகாட்டா நிறுவனம் விரும்புகிறது. நாம் இதனை ஒரு போட்டியாக அமைத்து, எமது நாட்டின் எதிர்காலத் தலைவர்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் அறிந்துகொள்ள விரும்புகிறோம். பொருளாதார சுதந்திரம் பற்றிய உங்களது கருத்துக்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். முக்கியமாக, இலங்கை முழுமையான பொருளாதார இயலாற்றலை அடைந்து கொள்வதற்காக, அதன் அடிப்படைத் தேவைப்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளை ஆராய முடியும்.

 

தகுதிபெறல் மற்றும் வழிகாட்டல்

•    இலங்கை பிரசைகள் அல்லது தற்போது நாட்டில் வதிவிடம் பெற்ற மாணவர்களுக்காக இந்தப் போட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

•    மாணவர்கள் - பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் அல்லது ஏதேனும் உயர்கல்வி நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர கல்வி கற்பவர்களாக இருக்க வேண்டும்.

•    விண்ணப்பதாரி 1993 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். (24 வயதுக்கு குறைந்தவர்)

•    விண்ணப்பதாரி தான் விண்ணப்பிக்கும் பிரிவைக் குறிப்பிட வேண்டும். இதனை உத்தியோகபூர்வ விண்ணப்பம் ஒன்றின் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும். (இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்).

•    கட்டுரையானது 'பொருளாதார சுதந்திரம் எனக்கு எவ்வாறு விளங்குகின்றது' என்ற தலைப்பில் எழுதப்பட வேண்டும். மாணவர்கள் இந்தத் தலைப்புக்கு ஏற்ற வகையில் வரைவிலக்கணங்களையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

•    பல்கலைக்கழகப் பிரிவில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் சுமார் 1500 சொற்களுக்குக் குறையாமலும், பாடசாலைப் பிரிவில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் சுமார் 1000 சொற்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

•    சமர்ப்பிக்கப்படும் இறுதி அறிக்கையானது, விண்ணப்பதாரியின் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். இன்னொருவரினால் சரிபார்க்கப்பட்டதாகவோ, அல்லது தரம் உயர்த்தப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. மற்றொருவரின் கருத்துக்களை அல்லது எண்ணங்களைப் பிரபிபண்ணி (Plagiarism) சமர்ப்பிப்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. குழு அல்லது இணைந்து சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

•          ஒரு விண்ணப்பதாரி ஒரு கட்டுரையை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். உயர் கல்வி நிறுவனங்களில் கற்கையை மேற்கொள்ளாத மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரிவில் விண்ணப்பிக்க முடியாது.

 

எவ்வாறு கட்டுரை எழுதுவது

•     'பொருளாதார சுதந்திரம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். இது தொடர்பான ஆவணங்கள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

•     தேவையானளவு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, சுய கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தோன்றியதும், உங்களது எண்ணங்களை ஒரு கட்டமைப்புக்கு அமைய சுருக்கமாக வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

•     உங்களது இணக்க முற்கோளை (Thesis) எழுதி, அதற்கமைய கட்டுரையின் நடுப்பகுதி, ஆரம்பம் மற்றும் முடிவு என்பனவற்றை அமைத்துக் கொள்ளுங்கள்.

•     உங்களது கட்டுரையை மீண்டும் ஒரு முறை வாசித்து இறுதி திருத்தங்களையும் மேற்கொள்ளுங்கள்.
   

எவ்வாறு விண்ணப்பிப்பது

•          விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

•   அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து, உங்களது கட்டுரையையும் அதில் பிரதிபண்ணி (Copy) உள்ளடக்கவும். (Paste)

•     மின்னஞ்சல் அல்லது ஒன்லைன் ஊடாக உங்களது ஆக்கங்களைச் சமர்ப்பிக்கவும்.

 

விருதுகளும் பரிசுகளும்

பாடசாலை மாணவர்கள்

  • முதலாமிடம் ரூபா 50,000
  • இரண்டாமிடம் ரூபா 30,000
  • மூன்றாமிடம் ரூபா 15,000 மற்றும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்

பல்கலைக்கழக / உயர்கல்வி மாணவர்கள்

  • முதலாமிடம் ரூபா 100,000
  • இரண்டாமிடம் ரூபா 50,000
  • இரண்டு சிறப்பு விருதுகளுக்கு தலா ரூபா 20,000 மற்றும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்

தெரிவு செய்யப்படும் மாணவர்கள், கொழும்பில் இடம்பெறவுள்ள தலைமைத்துவ மாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் இடம்பெறவுள்ள பிராந்திய தலைமைத்துவ முகாமில் பங்குபற்றுவதற்கான, அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கலாம்.

 

இரு பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசுகளுக்கு மட்டுமே வழக்கறிஞ்ஞர் பொறுப்பு.